தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் வகுப்புகளில் அவர்கள் பாடம் நடத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் போக்சோ தொடர்பான புகார்கள் பெறப்படும்போது எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.