சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடி அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் 21ஆம் தேதி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ரவுடி ஆகாஷ் அதிகம் அது போதையில் இருந்ததால் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்னும் முடிவு செய்த போலீசார் கடந்த 21 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஆகாசை அவரின் சகோதரரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். இந்த சூழலில் வீட்டிலிருந்த ஆகாஷ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து எட்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் இன்று உயிரிழந்துள்ளார். ஆகாஷின் மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த துறை ரீதியாக உத்தரவிட்டிருக்கின்றனர் விசாரணைக்கு பிறகு ஆகாஷ் மரணம் பற்றி உண்மைகள் வெளிவரும் என கூறப்படுகின்றது. போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.