அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை நாளாகும். அதனை தொடர்ந்து இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை அடுத்து நான்கு, ஐந்து ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகின்ற நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாளாக இருக்கிறது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கின்றது. மேலும் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டிருக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் விடப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 30 மற்றும் 1 தேதி ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் இருந்து 2050 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளோடு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மாலையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் பயணத்தை தொடங்குவதால் பல்வேறு போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த பேருந்துகள் சென்னையில் இருந்து கூடுதலாக இயக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவனந்தபுரம், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படுகிறது. இது பற்றி போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசும்போது வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் 2050 சேர்த்து மொத்தமாக 4,150 பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டு இருக்கின்றோம். மேலும் பொது மக்களின் தேவையை கருதி கூடுதலாகவும் இயக்க தயாராக இருக்கின்றோம் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க பகுதிவாரியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.