உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மாஷா அமினினியின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் நிலையில் கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் தலைமுடியை வெட்டி கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
ஈரானில் ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண் மாஷா அமினியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தான் அவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை மறுத்த காவல்துறையினர் தரப்பில், கைது செய்யப்பட்ட பின்னர் அங்கிருந்த பெண்களுடன் இருந்த போது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். ஆனால் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
https://www.instagram.com/p/CjDLdBCjB2a/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
ஈரானிய ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்நாட்டு பெண்களின் ஹிஜாப் எரிப்பு, தலைமுடி வெட்டுதல் ஆகிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் கனடாவில் வசிக்கும் பெண்களும் வான்கூவர் ஆர்ட் கேலரிக்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ஒரு பெண் தனது ஈரானிய அடையாள அட்டையை பல துண்டுகளாக வெட்டி, பின்னர் அமினி காவல்துறை காவலில் மரணித்ததற்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்த தனது தலைமுடியை வெட்டி கொண்டார்.