பிரிட்டன் ராஜ குடும்பத்திற்குள் வரும் முன்பே மன்னர் சார்லஸின் மனைவியான கமீலா செல்வந்தராக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் தற்போது அரசராக பொறுப்பேற்று இருக்கும் சார்லஸின் மனைவியான கமீலா பற்றிய பல தகவல்கள் வெளிவந்திருக்கிறது. ராஜகுடும்பத்திற்கு வருவதற்கு முன்பே கமீலா மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். இது மட்டுமல்லாமல் அப்போது அவருக்கு ராஜ குடும்பத்தினருடன் தொடர்பும் இருந்திருக்கிறது.
கமீலாவின் சகோதரரான மார்க் ஷாண்ட் பயணங்கள் குறித்து எழுதக்கூடிய எழுத்தாளராக இருந்திருக்கிறார். கடந்த 2017 ஆம் வருடத்தில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கிறார். கமீலாவிற்கு 1973 ஆம் வருடத்தில் முதல் திருமணம் நடந்திருக்கிறது. அவருடைய கணவரின் பெயர் ஆண்ட்ரூ பர்கர்.
இவர்கள் 1995ஆம் வருடத்தில் பிரிந்தார்கள். அதற்கு முன்பே கமீலாவிற்கும், மன்னர் சார்லஸிற்கும் தொடர்பு இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. சார்லஸ், இளவரசி டயானாவை விவாகரத்து பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக கமீலா தன் கணவரை பிரிந்திருக்கிறார். சார்லஸை திருமணம் செய்து கொள்ளும் போது, கமீலாவிற்கு இரண்டு பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள்.
மறைந்த இளவரசி டயானாவை போன்று கமீலாவிற்கும் வேல்ஸ் இளவரசி என்னும் பட்டம் கிடைக்க இருந்தது. எனினும் அவர் டயானா மீது அதிக மரியாதை வைத்திருந்ததால் அந்த பட்டத்தை பெறவில்லை என்று தெரிய வந்திருக்கிறது.