Categories
தேசிய செய்திகள்

Fake ID-க்கு வச்சாச்சு ஆப்பு…. இனி சிறை தண்டனை தான்….. ஒன்றிய அரசின் அதிரடி அறிவிப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இருந்தால் நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இத்தகைய வளர்ச்சி ஒருபுறம் நன்மைகளை கொடுத்தாலும் மறுபுறம் சில ஆபத்துகளையும் விளைவிக்கிறது. எடுத்துக்காட்டாக மர்ம நபர்கள் போலியான பெயரில் பண மோசடியில் ஈடுபடலாம். பல இடங்களில் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கினாலோ அல்லது வாட்ஸ் அப் டெலிகிராம் போன்ற செயலிகளை போலி அடையாளத்தில் உபயோகப்படுத்தினாலோ ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளை இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022-ன் கீழ் ஒன்றிய அரசு விதித்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |