Categories
உலக செய்திகள்

“இருவரும் உல்லாசமாக இருந்தோம்”… இறந்துவிட்டாள்… நம்பும் படியாக இல்லை… ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

நியூசிலாந்து நாட்டில் டிண்டர் (Tinder) செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்தவர் கிரேஸ் மிலன் (GRACE MILLANE). 27 வயது பெண்ணான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கிரேஸ் மிலன், ஆன்லைன் டேட்டிங் செயலியான (app) டிண்டர் மூலம் ஒரு 28 வயதான ஜெஸ்ஸி கெம்ப்சன் என்ற (Jesse Kempson) நபரிடம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஒருநாள் மிலன் அவரது வீட்டில் தங்கியுள்ளார்.

Image result for GRACE MILLANE

இதையடுத்து அவரது வீட்டில் மர்மமான முறையில் மிலன் உயிரிழந்து விட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவன் கூறியதாவது, “நாங்கள் இருவரும் உல்லாசமாக இருக்கும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டாள்” என்று கூறியுள்ளான்.

Image result for GRACE MILLANE

ஆனால் இந்த காரணம் நம்பும்படியாக இல்லாத காரணத்தால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள ஆக்லேண்ட் நீதிமன்ற நீதிபதி, அப்பெண்ணை கொலை செய்ததற்காக அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து  அதிரடியாக உத்தரவிட்டார்.

 

Categories

Tech |