Categories
உலக செய்திகள்

விபத்தில் இறந்தவர் மாநாட்டிற்கு வந்தாரா?… அதிபர் ஜோ பைடனை விமர்சிக்கும் மக்கள்…!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜாக்கி வாலோர்ஸ்கி சமீபத்தில் இறந்ததை மறந்து மாநாட்டில் அவரின் பெயரை கூறி அழைத்திருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய மூத்த பெண் உறுப்பினராக இருந்த ஜாக்கி வாலோர்ஸ்கி, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விபத்தில் பலியானார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பசி, ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த மாநாடு ஒன்றில் அதிபர் ஜோ பைடன் பேசிய போது, அவர் விபத்தில் உயிரிழந்ததை மறந்து அவரின் பெயரை கூறி அழைத்து விட்டார்.

அதாவது ஜாக்கி எங்கே இருக்கிறீர்கள்? இங்கே இருக்கிறீர்களா? அவர் இங்கே இல்லை போல  என்று கூறியிருக்கிறார். அதிபரின் ஞாபக மறதி குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள். அவர் பேசிய வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |