Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்பா…. “என்ன டைவ்”….. ‘சின்ன தல’ ரெய்னாவின் அட்டகாசமான கேட்ச்…. வைரல் வீடியோ..!!

இந்திய லெஜெண்ட்ஸ்  வீரரும், சிஎஸ்கே வீரருமான சின்ன தல ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் வீரர் ரெய்னா ஒரு அற்புதமான கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய லெஜெண்ட்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தது. அந்த அணியில் பென் டன்க் 25 46 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடி வந்தார்.. அப்போது அபிமன்யு மீதுன் 16வது ஓவரை வீசினார்.. அந்த ஓவரில் கடைசி பந்தை இடதுகை பேட்டர் பென் டன்க் ஆப் சைடு அடிக்க ரெய்னா ஒரு அட்டகாசமான டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதையடுத்து சச்சின் உள்ளிட்ட சக வீரர்கள் அவரை பாராட்டி விக்கெட்டை கொண்டாடினர்..

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பீல்டர் ஆவார். ரன் அவுட். கேட்ச் என பல அற்புதங்களை செய்து ரசிகர்களை கவரும்  இவர் தற்போது மீண்டும் இப்படி ஒரு கேட்ச் பிடித்து ரசிகர்களை மகிழ வைத்துள்ளார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா லெஜெண்ட்ஸ்  அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்து வென்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |