ரஷியர்கள் பின்லாந்து நாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தங்களது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று அதிபர் புதின் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பலத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ரஷியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி ரஷியர்கள் அதிகமானோர் செல்கின்றனர். இதற்கு பின்லாந்து அரசு தடை விதித்தது.
மேலும் இது குறித்து வெளியுறவு மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ கூறியதாவது. தற்போது உள்ள நிலைமையில் ரஷியாவில் இருந்து நமது நாட்டிற்கு அதிகமான மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனை தடுப்பதற்காக மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வருபவர்கள், வேலை மற்றும் படிப்பு போன்ற காரணங்களுக்காக வருபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் ரஷிய ராணுவத்திற்கான அணிதிரட்டல் உத்தரவு பின்லாந்து அரசு எடுத்துள்ள முடிவில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என அவர் கூறியுள்ளார்.