Categories
தேசிய செய்திகள்

வெட்டுகிளிகள் தாக்குதல் அதிகரிக்கும்…. இந்தியாவில் பயிர்களுக்கு ஆபத்து….. பாபா வங்காவின் கணிப்பு…..!!!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன.

அந்த வகையில், பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு உலகில் வெப்பநிலை குறைவதால் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களைத் தாக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இதனால் பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. பாபாவின் கணிப்புகள் குறித்து இணையத்தில் அதிகளவில் மக்கள் விவாதம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதே போல் இத்தாலியும் மிக மோசமான வறட்சியை சந்தித்தது.

Categories

Tech |