Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உலக ரேபிஸ் தினம்…..வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி….. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அதிகாரிகள் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து இயற்கை பாதுகாப்பு மைய கால்நடை மருத்துவர்கள் பாரத் ஜோதி, சுகுமாரன் ஆகியோர் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களை தெருக்களில் விடக்கூடாது. கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கு நோய் பாதிப்பு இல்லை. மிருகங்களின் உமிழ்நீர் மூலம் நாய்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கண்டிப்பாக வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |