தாயை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.என். புரம் பகுதியில் ஈஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கூலி தொழிலாளியான அருணாச்சல பாண்டியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருணாச்சல பாண்டியன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மது குடிக்க பணம் கேட்டு பாண்டியன் தகராறு செய்துள்ளார்.
அப்போது பணம் தர மறுத்த ஈஸ்வரியை பாண்டியன் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அருணாச்சல பாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாண்டியனுக்கு 3000 ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.