இளவரசர் சார்லஸ் வீட்டில் தீவிரவாதிகளிடம் இருந்து தப்புவதற்காக ஒரு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மன்னர் சார்லஸ். இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டு டயானாவை திருமணம் செய்வதற்கு முன்பு highgrove house என்ற வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டில் எஃகு என்ற சுவர் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அந்த அறை உருவாக்கப்பட்டது.
மேலும் தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து விழுந்தாலும் அந்த அறை மட்டும் தாக்குப்பிடித்து நிற்கும் என்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளர் Brian hoey என்பவர். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. அந்த அறையை விட அந்த அறைக்குள் இருக்கும் விடயங்கள் சுவாரஸ்யமானவை. அங்கு மருத்துவ பொருட்கள், சார்லஸ் மற்றும் கமீலாவின் ரத்த வகை மாதிரிகள், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாத உணவு,ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்கள், காற்றை சுத்திகரிக்கும் கருவி ஆகியவை உள்ளது என அவர் கூறியுள்ளார்.