அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி ஏரி அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்தனரா? இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.