தமிழகம் முழுவதும் அக்டோபர் 2இல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கு வேண்டும் அல்லது பரிசீலிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதகத்துக்காக காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என தெரிவித்துள்ளதால் அனுமதி மறுப்பு என சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல திருமாவளவன் உள்ளிட்ட அவர்கள் அறிவித்திருக்கக்கூடிய அந்த கூட்டத்திற்கும் தடை என்பது விதிக்கப்பட்டது. மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்ற சூழலில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.