Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்வோம் – தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரபரப்பு எச்சரிக்கை…!!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2013-ஆம் ஆண்டு கைகளால் மலம் அள்ளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பொழுது பல தூய்மை பணியாளர்கள் உயிரிழந்ததையடுத்து 2013-ஆம் ஆண்டு மலம், குப்பை, பாதாள சாக்கடை ஆகியவற்றை மனித சக்தியை கொண்டு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.ஆனால் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்பும் பல தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடைகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும் பொழுதும் உயிர் இழந்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பை குறைக்க பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, குப்பை அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வது போன்ற செயல்களை நவீன இயந்திரங்கள் கொண்டு ரோபோ பயன்படுத்தி செய்ய வேண்டும் எனவும்,

அதிகாரிகளுக்கு மனு அளித்தும் அதன் மீது தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 2013-ஆம் ஆண்டு சட்டத்தின்படி  மனிதர்களை கொண்டு மலம் அள்ளுதல்,  பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல்,  ரோபோட் மற்றும் நவீன இயந்திரங்கள் கொண்டு பணியை செய்ய உத்தரவிட வேண்டும் என மனவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயணன் பிரசாத் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் முன்பாக மனுதாரர் தரப்பில்,  தூய்மை பணியாளர்கள் உரிய உபகரணம் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் மனுதாரர் சமர்ப்பித்துள்ள புகைப்படம் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.

புகைப்படம் குறித்து தகவல் உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்க செய்ய உத்தரவிடப்படும்,  மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படத்தில் தவறி இருக்கும் பட்சத்தில் ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், மனிதர்கள் கைகளால், சாக்கடைகளால், குப்பைகள்  போன்றவற்றை சுத்தம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தும்,

இதனை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்  அலட்சியம் காட்டுகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு எப்பொழுது விடுவிகாலம் பிறக்கும் என தெரியவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைக்கு செயலாளர் முழுமையான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Categories

Tech |