Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை இட்லி சாப்பிட்டாரா ? தேங்காய் சட்னி தொட்டுக்கிட்டாரா ? C.Mக்கு உளவுத்துறை ரிப்போர்ட் .. பெரும் பரபரப்பு தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தினுடைய புலன் இன்டெலிஜென்ஸ் ரொம்ப பெயர் வாங்கியது. 15 மாத காலமாக அது சரியில்லை என்பது இன்னொரு விஷயம். அதை திரும்ப ஆக்டிவேட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எங்களுடைய ஒரு கோரிக்கை. கடந்த சில நாட்களாக காவல்துறை வேகவேகமாக சென்று முதலமைச்சரை எதிர்த்து போஸ்ட்  ஓட்டுபவர்களை கைது செய்கிறார்கள். ஆ.ராஜா அவர்கள் சொன்ன கருத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட கிடையாது.

திருச்சியில் ஒரே ஒரு ஸ்டேஷன்ல பாரதிய ஜனதா கட்சிக்கொடுத்த புகாருக்காக சிஎஸ்ஆர் கொடுத்த அந்த சப் இன்ஸ்பெக்டரையும் டிரான்ஸ்பர் செய்து, ஆயுத காவல் படைகள் வச்சிருக்காங்க. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்பளைண்டுகள் பெட்டிசனாக மட்டும் பெறப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அதை எதிர்த்து பேசியவர்கள் … உதாரணத்திற்கு கோயமுத்தூர் மாவட்டத்தை தலைவர் கைது.

நம்முடைய தொண்டர்கள்  மிருகத்தனமாக அவர்களை தாக்கி, அவர்கள் கைது. தமிழ்நாடு முழுவதும் கைது. பெண்களிடம் முறையில்லாமல் நடந்து கொண்டது. இது எல்லாம் ஒரு பக்க சாதனை.  இதை போக்கஸ் பண்ற இன்டெலிஜென்ஸ் இந்த பிஎஃப் மேல போகஸ் பண்ணி இருந்தா, இந்த நிலைமை வந்திருக்குமா ? பாரதிய ஜனதா கட்சியின் மீது முழு இன்டெலிஜென்ட் டிபார்ட்மெண்ட்டே உக்கார்ந்து இருக்கு.

காலையிலிருந்து நைட்டு வரைக்கும் அண்ணாமலை இட்லி சாப்பிட்டாரா ? இட்லிக்கு தேங்காய் சட்னி தொட்டுக்கிட்டாரா ?  வீட்டிலிருந்து வெளியே வரும் போது என்ன செருப்பு போட்டுட்டு வராரு ? இதெல்லாம் மானிட்டர் பண்ற இன்டெலிஜென்ஸ், தமிழ்நாட்டில் எவன் கலவரம் பண்ணுவான் அப்படிங்கறத மானிட்டர் பண்ணுவதற்கு என்ன பிரச்சனை ?

எனக்கு பின்னால ரெண்டு வண்டியை போட்டு,  எங்கெல்லாம் போற ?  எந்தெந்த ஓட்டலுக்கு எல்லாம் போற ? எங்கெல்லாம்  சாப்பிடற ? மேடைல என்னெல்லாம் பேசுறன்னு ? பத்து பேர் சுத்தி இருக்காங்க  ரிப்போர்ட் கொடுக்குறதுக்கு…  ஒரு மணி நேரத்துக்கு ஒருக்கா முதலமைச்சர் ரிப்போர்ட் கொடுக்கிறதுக்கு. ஆனால் அந்த வேலையை இங்க செஞ்சிருந்தோம்னா, இந்த பிரச்சனை வந்திருக்காது. அதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு. துரத்தி துரத்தி பார்த்து ஜனதா கட்சி தொண்டர்களை மீது உங்களுக்கு என்ன கோபம் ? கைது செய்து, கைது செய்து கொண்டு இருக்கீங்க என எச்சரித்தார்.

Categories

Tech |