தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு இருக்க வேண்டும்.இவர்களின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.தற்போது உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றது.
இந்த தகுதிகளை உடையோர் தங்களின் கல்விச்சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெறுவோர் தொடர்ந்து மூன்று ஆண்டு வரை உதவித்தொகை பெற வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்டு கணக்கு புத்தக நகலுடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.