Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களில் நாளை (அக்டோபர் 1) முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை நாட்கள் வர உள்ளதால் மும்பை,புது டெல்லி மற்றும் சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயனியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கும் நோக்கத்திலும் நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அவ்வகையில் தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம்,திருவள்ளூர் மற்றும் ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படுகின்றது. இந்த கட்டண உயர்வு ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அதன் பிறகு பழைய கட்டண முறை அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |