ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பண்டிகை கால சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் அதன் மூலமாக ஏராளமான பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் அமேசான் செப்டம்பர் 23ஆம் தேதி தள்ளுபடி விற்பனையை தொடங்கியது. இந்த தள்ளுபடி விற்பனையானது இன்றுடன் நிறைவடைகிறது.
இதில் ஸ்மார்ட் போன் ,லேப்டாப், ஏசி, பிரிட்ஜ் உள்ள வீட்டுக்கு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல குறைந்த விலையில் பொருட்கள் விற்பனையாகிறது. கடந்த ஏழு நாட்களில் லட்சக்கணக்கில் பொருட்கள் விற்பனையாகி உள்ள நிலையில் இன்றுடன் இந்த விற்பனை நிறைவடைகிறது