Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் சோதனை…! பொன்னியின் செல்வன் வெளியான 5 திரையரங்குகளில் பரபரப்பு…..!!!!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் சேலத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே 5 சினிமா திரையரங்குகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் விழுந்திருந்தது இதனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் சற்று நேரம் படம் பார்ப்பது தடை பட்டுள்ளது.

Categories

Tech |