Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பெருநகர் காவல் துறையின் சார்பில்….. கேட்பாரற்று கிடந்த 695 வாகனங்கள் ஏலம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 595 மோட்டார் சைக்கிள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 695 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி அக் 15-ம் தேதி காலை 10 மணி முதல் ஏலம் தொடங்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அக்டோபர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்நிலையில் முன்பதிவுக்கு வருபவர்கள் அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி சான்றிதலை சமர்ப்பித்தால் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் அதற்கான பணம் மற்றும் ஜிஎஸ்டி வரியை ஏலம் முடிவடைந்த மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |