Categories
அரசியல்

நவராத்திரி விழா ஏன் கொண்டாடப்படுகிறது?….. அதன் சிறப்புகள் என்னென்ன?…. இதோ சில தகவல்…..!!!!

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை தான் நவராத்திரி விழா . பெண் தெய்வத்தை போற்றி வணங்கும் திருவிழாக்களின் முதல் இடத்தில் இருப்பது இந்த நவராத்திரி விழா தான் .இந்த விழா ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 10 நாட்கள் கொண்டாடப்படும்.இந்த வருடம் நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நவராத்திரி விழா எதற்காக கொண்டாடப்படுகிறது இதன் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அரக்கர்கள், அரசன், மகிஷாசுரன் மூன்று லோகங்களான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சமயத்தில் அன்னை பராசக்தி மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளில் அவனை வதம் செய்தாள்.அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தான் பத்து நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில் அவதாரங்களில் வழிபடத் தொடங்கினார்கள் .

இந்து புராணத்தின்படி நவராத்திரி திருவிழா மூன்று காட்சி தரும் அன்னை பராசக்தியை 30 முக்கோடியாக இருக்கும் முப்பெரும் தேவைகளாக வணங்கி கொண்டாடுகிறார்கள். முதல் மூன்று நாட்களுக்கு சக்தியை அருளும் அன்னை பரமேஸ்வரி ஆகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு செல்வத்தை அருளும் மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் கல்விக்கு அதிபதியான அன்னை சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதமாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் பெண்கள் நவராத்திரி பூஜை செய்து வழிபடுவதன் மூலம் அனைத்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். குடும்பத்தின் செல்வம் பெருகி ஒற்றுமையும் இருக்கும்.சிவராத்திரி நாட்களில் மாலை ஏழு மணி முதல் இரவு 9:30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு உகந்த நேரம். இந்த ஒன்பது நாட்களும் நவராத்திரி பூஜை செய்தால் முழு பலனும் கிடைக்கும் என புராண வரலாறு கூறுகிறது.

Categories

Tech |