சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் தன் வசமாக்கியுள்ளார்.
இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் யாதவ் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். இவர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சிறப்பாகவே ஆடி இருந்தார். அதில் கடந்த 25ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் விளாசினார். இதனால் இந்த ஆண்டு டி20 போட்டியில் இதுவரை 732 ரன்கள் விளாசியுள்ளார்.. இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஷிகர் தவான் 689 ரன்கள் அடித்து இருந்ததே ஒரு காலண்டர் ஆண்டில் இந்திய வீரர் அடித்த அதிக பட்ச ரன்னாக இருந்தது..
இந்நிலையில் சூரியகுமார் யாதவ் மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் தன் வசமாக்கியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் சூர்யகுமார் யாதவ் இதுவரையில் 45 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் கடந்த 2021 ஆம் ஆண்டு 26 இன்னிங்க்சில் 42 சிக்ஸர்கள் அடித்தது சாதனையாக இருந்தது.
தற்போது அந்த சாதனையை 21 போட்டியிலேயே காலி செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.. இன்னும் தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து இருப்பதால் சிக்சர்கள் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.. 32 வயதான சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் தற்போது 2ஆவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 – A remarkable year for Suryakumar Yadav🤩#INDvSA | @surya_14kumar pic.twitter.com/n2VMOhOKLw
— CricTracker (@Cricketracker) September 28, 2022
Mohammad Rizwan's record of most T20I sixes in a year has been snatched by Suryakumar Yadav 🙌#T20I #Rizwan #SuryakumarYadav pic.twitter.com/V5l7kC0xhg
— Cricket Pakistan (@cricketpakcompk) September 29, 2022