இந்தியாவில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரெய்லோபஃபி என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே நீங்கள் இருந்த இடத்திலிருந்து ரயில் வரும் நேரம் ரயில் எந்த இடத்தில் நிற்கிறது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு 139 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டால் கூட உங்கள் வாட்ஸ் அப்பில் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரம் மற்றும் இடம் போன்றவைகள் தெரிந்து விடும்.
இந்நிலையில் ரெய்லோஃபியின் வாட்ஸப் நம்பர் ஆன +91-9881193322 நம்பரை மொபைலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின் தொடர்பு பட்டியலை ரெஃப்ரஷ் செய்துவிட்டு பார்த்தால் உங்கள் வாட்ஸ் அப்பில் நீங்கள் ஷேவ் செய்த நம்பர் வந்து விடும். இதனையடுத்து சேட் பாக்ஸில் 10 பிஎன்ஆர் என்பதை அனுப்பினால் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரம் மற்றும் இடம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் ரயிலில் செல்லும்போது உணவை பெற விரும்பினால் ஐஆர்சிடிசியின் இ கேட்டரிங் இணையதளமான www.ecatering.irctc.co.in என்ற முகவரிக்குள் ஆர்டர் சென்று செய்யலாம்.