Categories
பல்சுவை

பள்ளி மாணவியின் புத்தக பையில் உஷ் உஷ் சத்தம்….. படமெடுத்து வெளியே வந்த கருநாகம்…. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள சேவை அதிகரித்ததில் இருந்து பல்வேறு விதமான பொழுதுபோக்கு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்படுகிறது. அதோடு திகிலூட்டும் வீடியோக்களும் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜாப்பூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ஷாஜாபூர் பகுதியில் உள்ள படோனி பள்ளியில் உமா ராஜக் என்ற சிறுமி 10-ம் வகுப்பு  படித்து வருகிறார். இந்த சிறுமியின்  ஸ்கூல் பேக்கில் ஒரு கருநாகம் இருந்துள்ளது. அந்தப் பையை  ஆசிரியர் திறந்து பார்த்த போது அதிலிருந்து கருநாகம் சீரிட்டு வெளியே வந்தது. இதை பார்த்த ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். இந்த சம்பவத்தை கரண் வசிஷ்டா என்ற நபர் செல்போனில் முழுவதுமாக வீடியோ எடுத்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |