தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெய் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் தான் நடித்த பல்வேறு விதமான படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ஜெய்யை பற்றி சமீப காலமாகவே கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளது. அதாவது முதலில் அஞ்சலியை காதலித்து வந்த ஜெய் அவரை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியானது.
ஆனால் சில காரணங்களால் அஞ்சலி மற்றும் ஜெய் காதல் பாதியிலேயே முறிந்தது. அதன் பிறகு சமீப காலமாகவே நடிகர் ஜெய், வாணி போஜனுடன் லிவிங் டுகெதரில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த சமயத்தில் நடிகை வாணி போஜன் ஒரு மறைமுகமான twitter பதிவை போட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதில் எனக்கு சினிமாவை தவிர வேறு யாரும் முக்கியமில்லை எனவும், நான் உஷாராகி விட்டேன் எனவும் பதிவிட்டு இருந்தார். ஆனால் நடிகர் ஜெய் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகர் ஜெய்க்கு அவருடைய வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஜெய்யும் சம்மதம் தெரிவித்துள்ளார். இவருக்கு அவருடைய பெரியப்பாவும், இசையமைப்பாளருமான தேவா தான் பெண் பார்க்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் ஜெய் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் பரவியதால் தான் தற்போது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.