Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லியில் சொல்லி அடிச்ச ஓபிஎஸ்.. பரபரப்பு உத்தரவு போட்ட நீதிபதி … என்ன நடந்தது உச்சநீதிமன்றத்தில் ?

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், பொதுக்குழு தொடர்பாக 15 நாட்களாக்கு முன்னதாகவே அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டி முடிவுகள் எடுக்க வேண்டும்.

ஆகவே பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன, சரியான முறையில் பொதுக்குழு பின்பற்றப்படவில்லை. மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது அதற்கான வேட்பாளர்களை கூட ஒன்றாக தான் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அதன் பிறகு பல்வேறு விதமான முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளன என்ற புகாரை முன்வைத்து ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தது.

ஆகவேதான் உச்சநீதிமன்றம் தற்போது இந்த வழக்கிலே இபிஎஸ் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களுடைய வாதங்கள் என்ன என்பதை தெரிவித்துக் கொண்டு அதன் பிறகு விசாரணை தொடரலாம் என்று உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தான் தற்பொழுது இடைக்காலத்திலே தேர்தல் நடத்தி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |