Categories
உலக செய்திகள்

விண்வெளியில் 195 நாட்கள் பணி நிறைவு… நாடு திரும்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்…!!!!!!

ஓலேக் ஆர்டேமிவ்,டெனிஸ் மாட்வீவ் மற்றும் செய்தி கோர்சகோவ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 195 நாட்கள் பணியை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளனர். கஜகஸ்தானில் அமைந்துள்ள ஜெஸ்காஸ்கன் நகரத்திலிருந்து தென்கிழக்கு பகுதியில் 148 கிலோ மீட்டர்கள் தொலைவில் பத்திரமாக தரை இறங்கி உள்ளனர். ரஷ்யா போர் தொடங்கிய பின் மார்ச் மாதம் இவர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதன் பின் அங்கு பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு அவர்கள் 195 நாட்களுக்குப் பின் தற்போது பூமிக்கு திரும்பி உள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய பின் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் மட்டுமே ஒத்துழைப்பு கடைசியாக எஞ்சி உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் சேர்ந்த குழு ஒன்று ரஷ்யாவின் வின்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்காவின் பிராங்க் ரூபியோ மற்றும் ரஷ்யாவின் செர்சி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் போன்றோர் கஜகஸ்தானில் உள்ள  பைகோனுர் காஸ்மோட்ரோமில் இருந்து ரோஸ்கோஸ்மோசால் இயக்கப்படும் வின்களத்தில் சர்வதே விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |