விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வந்த புகைப்படத்தின்படி ராதிகா மற்றும் கோபிக்கு திருமணம் முடிவடைந்துள்ளது தெரிய வருகிறது. இது தொடர்பான எபிசோடுகள் வரும் காலத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பாக்யா ஒரு திருமணத்திற்கு சமைக்க செல்கிறார். ஆனால் முதலில் கோபி-ராதிகாவின் திருமணத்திற்கு சமைப்பதற்கு சென்றது பாக்யாவுக்கு தெரியாது. இதை செல்வி தான் முதலில் பார்க்கிறார்.
உடனே பதறிப் போன செல்வி பாக்யாவை அழைத்து வருகிறார். அந்த நேரம் பார்த்து ராதிகாவும்-கோபியும் மணமேடையில் திருமண கோலத்தில் போஸ் கொடுக்கின்றனர். இதைப் பார்த்த பாக்யா மிகவும் அதிர்ச்சியாகிறார். தன்னுடைய கணவரின் திருமணத்தை சற்றும் எதிர்பார்க்காத பாக்யா தடுமாறி போகிறாள். கோபியின் அப்பாவோ மண்டபம் மண்டபமாக ஆட்டோவில் சென்று பார்க்கிறார். ஆனால் ராமமூர்த்தி மண்டபத்திற்கு வந்தாலும் திருமணம் நிற்க போவதில்லை என்பது தெரிந்து விட்டது. அதன்பிறகு செல்வி அக்கா கோபியை சரமாரியாக கேள்வி கேட்கிறார். உங்களுக்கு வெட்கமாக இல்லையா சார்.
வீட்டுல கல்யாணம் வயசுல பையன வச்சுக்கிட்டு இப்படி ஒரு கல்யாணம் தேவையா? நீங்க ஒரு மனுஷனே கிடையாதுன்னு சொல்லி திட்டுறாங்க. பாக்யா பாவம் என்று சொல்லி செல்வி கதறி அழுகிறாள். இதைப் பார்த்த ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். மேலும் ராமமூர்த்தி திருமண மண்டபத்திற்குள் வந்த பிறகு கோபிக்கும், அவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டையில் ராமமூர்த்தியின் சட்டையை கோபி பிடிக்கிறார். இதற்கு மேல் என்ன நடக்கும் என்பதை இன்றைய எபிசோடில் தான் தெரிந்து கொள்ள முடியும்.