தாய்மொழி தின வாழ்த்துக்கள் சொல்லும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
உலகில் வாழும் அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்க 21ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1999-ம் ஆண்டு முதல் சர்வதேச தாய்மொழி நாள் என்று யுனெஸ்கோ அறிவித்தது. உலக அமைதியை நிலைநாட்டவும் , பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளையும் பாதுகாக்க உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் , ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’, ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என சொல்லி வளர்ந்தது தமிழினம்! தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்! அனைவர்க்கும் #motherlanguageday2020 வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.
'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என சொல்லி வளர்ந்தது தமிழினம்!
தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!
மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்!
அனைவர்க்கும் #motherlanguageday2020 வாழ்த்துகள்! pic.twitter.com/SU9Ob87wPX
— M.K.Stalin (@mkstalin) February 21, 2020