Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 9ம் தேதி பொதுக்குழு கூட்டம்… தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல்… வெளியான தகவல்…!!!!!

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 28ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அமைந்த கரையில் உள்ள செயின் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் பொது குழு கூட்டத்தில் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த பதவிகளுக்கு வரும் ஏழாம் தேதி முதல் காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என திமுக தலைவர் அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |