தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 1,2 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு விடுமுறையாகும்.இடையில் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையில் இருப்பார்கள்.இந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதனைப் போலவே பள்ளி மாணவர்களுக்கும் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.