Categories
மாநில செய்திகள்

வந்தே பாரத் ரயில் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்… இதோ முழு விவரம்..!!!!

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் உருவாக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் விதமாக இது போன்ற மொத்தம் 75 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதிவேக ரயிலான வந்தே பாரத் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மேலும் இது 52 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.

1.புதிய வந்தே பாரத் ரயில்கள் முதல் இரண்டு வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வசதியை கொண்டுள்ளது.

2. ஒவ்வொரு ரயிலின் பெட்டியிலும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தப்பித்துக் கொள்ளும் விதமாக நான்கு அவசர ஜன்னல்கள் இருக்கிறது.

3. புதிய வந்தே பாரத் ரயில்கள் ரயில் மோதலை தவிர்க்க உள்நாட்டு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு இருக்கும்.

4. புதிய வந்தே பாரத் ரயில்களில் சிறந்த வெப்ப காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனர் கட்டுப்பாட்டு அமைப்பும் உள்ளது.

5. பயணிகள் தகவல் மற்றும் இன்போடைன்மென்ட் சிஸ்டம் முந்தைய கால ரயில்களில் காணப்பட்ட 24 இன்ச் டிஸ்ப்ளேக்கு பதிலாக 32 இன்ச் டிஸ்ப்ளேவில் கொண்டிருக்கும்.

6. இந்த ரயிலில் ஏர் கண்டிஷனிங் தகவல் தொடர்பு மற்றும் ஜி எஸ் எம், ஜி பி ஆர் எஸ் மூலம் கட்டுப்பாட்டு மையம் பராமரிப்பு ஊழியர்களுக்கு கருத்து தெரிவிக்க மேம்படுத்தப்பட்ட கோர்ஸ் கட்டுப்பாட்டு மேலாண்மை அமைப்பும் இருக்கிறது.

7. புதிய ரயிலில் நான்கு பிளாட்பார்ம் பக்க கேமராக்கள் இருக்கும் அவற்றில் இரண்டு கோச்சின் உள்ளே இருக்கும் பின்புற கேமராக்களும் இருக்கிறது.

8. ஓட்டுநர் பாதுகாவலர் தொடர்பான குரல் பதிவு வசதியும் கிடைக்கும்.

9. ரயில் பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நான்கு அவசர விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

10. தீ பாதுகாப்பு அளவை மேம்படுத்த அனைத்து பெட்டிகளிலும் ஏரோசில் தீயை அடக்கும் அமைப்பை இந்த ரயிலில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Categories

Tech |