சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன.
ஆனால் இப்போது கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் விடப்படுகிறது.தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. எச்1என்1க்கு தினம் தோறும் 1000 இடங்களில் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 374 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.