தமிழில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு நல்ல ரசிகர்கள் இருந்தார்கள் ஆனலும் இவரின் காதல் விவகாரத்தால் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.மேலும் இவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் , அந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிப்பார் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் லாஸ்லியா பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் , இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாக உருவாக இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து லாஸ்லியா தனது ட்வீட்டர் பக்கத்தில் நானும் ஹீரோயினாக நடிக்கிறேன் என்பதை நினைவு படுத்தும் வகையில் தனது போட்டோ பதிவிட்டிருந்தார். அதற்க்கு ரசிகர்கள் , நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.