மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூலான ரூபாய் 15 கோடியை பொன்னியின் செல்வன் படம் தாண்டியுள்ளது. இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை குவித்த படம் பொன்னியின் செல்வன்.
இந்த படத்தின் வெளிநாட்டு முன்பதிவு வசூல் சுமார் 1.3 மில்லியன் டாலர்கள்(10 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளே உலக அளவில் 50 முதல் 60 கோடி வசூல் செய்துள்ளது. இது இந்த வருடத்தில் எந்த தமிழ் படமும் செய்யாத அதிகபட்ச வசூல் ஆகும்.