Categories
தேசிய செய்திகள்

PFI அமைப்பு தலைக்கு இதுவும் ஒரு காரணமாகத்தான் இருக்குமோ?….. வதந்தியை கிளப்பிய தகவல்….!!!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளில் நிறைவேறி உள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர் கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற சிறுபான்மையினரின் நலனுக்காகவே இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக இந்த போராட்டம் அடங்கிய நிலையில் சில மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெரும் பேச்சுக்கு இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகு சட்ட அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதனுடன் தொடர்புடைய கிளை அமைப்புகளுக்கும் ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டமும் ஒரு காரணம் தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து இஸ்லாமியர் ஒருவர் கூறியது, பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உனக்கு எதிரான குரலை ஒடுக்கும் நடவடிக்கையாக தெரிகிறது. ஏனென்றால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை பிஎப்ஐ அமைப்பு தான் எடுத்து வந்தது. எனவே எதிர்காலத்தில் சிஏஏ சட்டம், பொது சிவில் சட்டம், மதமாற்ற தடை சட்டம், இந்து ராஷ்டிரா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்திட்டத்தை நிறைவேற்ற பிஎஃப்ஐ தடையாக இருக்கும் என்பதை அவர்கள் கணக்கு. அதனால் கூட பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |