Categories
தேசிய செய்திகள்

flipkart நிறுவனத்தில் லேப்டாப் ஆர்டர்…. பார்சலில் மணக்கும் சோப்பு டப்பா டெலிவரி…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்‌….!!!!

இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் விற்பனை தளமாக flipkart நிறுவனம் இருக்கிறது. கடந்த 23-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு அசத்தல் ஆஃபர்கள் போடப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் ஆர்வமாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் flipkart நிறுவனத்தில் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார்.

இந்த லேப்டாப் பார்சலை flipkart நிறுவனம் மாணவர் வீட்டில் டெலிவரி செய்துள்ளது. அப்போது மாணவர் வீட்டில் இல்லாததால் அவருடைய தந்தை பார்சலை பிரித்து பார்த்துள்ளார். பார்சலை பிரித்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது லேப்டாப்புக்கு பதிலாக மணக்கும் சோப்பு டப்பா பார்சலில் வந்துள்ளது. இந்த விவரத்தை flipkart நிறுவனத்தில் மாணவர் கூறியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமேசான் நிறுவனத்தில் ரெட்மி பவர் பேங்க் ஆர்டர் செய்தவருக்கு சலவை சோப் வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |