குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம், கவுன்சிலிங் கொடுக்க சுற்றறிக்கை.. ஆத்திரமடைந்த மாணவர்கள்..!
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் நலத் துறை அதிகாரி இஷாவின் சுல்தானா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை கண்டனத்திற்கு ஆளாக்கியுள்ளது.
சுற்றறிக்கையை கண்டு ஆத்திரமடைந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றறிக்கை நகலை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வருகிற 26-ஆம் தேதி பல்கலைகழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வரவிருக்கிறார். இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் பல்கலைகழகத்தில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.