Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கணவன் ஜெர்மனி செல்ல….. மனைவி தற்கொலை….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே கணவர் வெளிநாட்டிற்கு சென்ற மறுநாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு  மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் 12வது தெருவில் வசித்து வருபவர் மதுரா. இவரது கணவர் ஜெர்மனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியா வந்த அவர் குடும்பத்தினருடன் நாட்களை கழித்து விட்டு பின் மீண்டும் நேற்று முன்தினம் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.

இவர்களது மகன் ஹரிஹரன் நேற்றையதினம் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது உள்பக்கமாக கதவு தாளிட்டு இருந்தது.  இதையடுத்து வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக கதவை உடைத்து பார்த்தபோது தாய் மதுரா தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்தார்.

பின் இது குறித்து காவல் நிலையத்தில் ஹரிஹரன் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மதுராவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |