பிக் பாஸ் 6 ம் சீசன் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. சென்ற சீசனில் பெரிய ரேட்டிங் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் இந்த தடவை பல பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கூட கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விஜய் டிவியில் தினமும் இரவு ஒரு மணி ஷோ ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் ஹாட்ஸ்டார் இல் நேரடியாக 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்ப இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கமல்ஹாசன் புது ப்ரோமோவில் அறிவித்திருக்கிறார்.
Categories