Categories
மாநில செய்திகள்

தமிழக யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் கைது…. Police அதிரடி…. ஆனா கடைசியில டிவிஸ்ட்…!!!

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் யூட்யூபில் twin throttlers என்ற சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் நீண்ட தூரம் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்துவை தன்னுடன் பைக்கில் வைத்துக்கொண்டு அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டியதற்காக டிடிஎப் வாசன் மீது சாலை விதிகளை மீறுதல், அஜாக்கிரதையாக மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் ஜாமின் பெறுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில் யூடியூப்பர் டிடிஎஃப் வாசனை கோவை சூலூர் போலீசார் கைது செய்தனர்.  பெங்களூருவுக்கு தப்பிச் செல்ல முயன்ற டிடிஎஃப் வாசனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து சில மணி நேரங்களில் அவரை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Categories

Tech |