தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கடமலை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர்,திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.