தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள எல்புடையாம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான கோபி(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஆட்டியானூர் கிராமத்தில் வசித்த புஷ்பவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபி அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் புஷ்பவதி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த புஷ்பவதியின் உறவினர்கள் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறு காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.