பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழு பிரபல நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். இவரது தெலுங்கு படங்களை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிட்டு நல்ல வசூல் பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து பிரபாஸின் பெரியப்பாவும் நடிகருமான கிருஷ்ணராஜூ சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது அவரது பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மோகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரபாஸ் குடும்பத்தினருடன் கிராமத்திற்கு வந்திருந்தார்.
அப்போது பிரபாஸை காண வீட்டின் முன்னாள் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு கிராமத்தினர் ஒரு லட்சம் பேருக்கு பிரபாஸ் உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நடிகையும் ஆந்திர மாநில மந்திரியுமான ரோஜா வந்திருந்தார். அவரும் பிரபாஸ் சந்தித்த பேசினார். அப்போது நடிகர் கிருஷ்ணன் ராஜுக்கு 2 ஏக்கர் நிலபரத்தில் நினைவிடம் கட்ட முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி ஏற்பாடு செய்வதாக ரோஜா உறுதி அளித்தார். கிருஷ்ணராஜு பெயரில் ரூ.3 கோடியில் பிரபாஸ் அறக்கட்டளை தொடங்கினர். அதன் மூலம் நலிந்தோருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.