குடும்பத் தகராறு காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்புதாஸ் ஜோசி தம்பதியினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் குழந்தையை பராமரித்துக் கொள்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு சண்டை போட்டு தனித்தனியே உறங்க சென்றுள்ளனர்.
நேற்று காலை வெகுநேரமாகியும் கணவர் எழுந்து வராத காரணத்தினால் மனைவி ஜோசி படுக்கை அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அன்புதாஸ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோசி அக்கம் பக்கத்தினர் உதவியுடன்அன்புதாஸை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.