Categories
மாநில செய்திகள்

“நான் தல தோனியின் ரசிகன்” அதனாலதான் பினிஷிங்க் ஆட வச்சுட்டாங்க…. ஜாலியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

திமுக ஐடி விங் சார்பில் செப்டம்பர் மாதத்தில் திராவிட மாதம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக ட்விட்டர் பேஸில் பல்வேறு தலைவர்கள் உரையாற்றி வந்தனர். இந்நிலையில் திராவிட மாதத்தின் கடைசி நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மேடைப்பேச்சு, திரைப்படங்கள் மற்றும் எழுத்து மூலம் பொது மக்களிடம் கொண்டு சென்றோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் தொழில்நுட்பத்தின் மூலமாகவே அனைத்து தகவல்களையும் எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது.

பொதுவாக மனிதன் ஒரு நாளைக்கு 3 மணி நேரத்தை செல்போன் பயன்படுத்துவதற்காக உபயோகப்படுத்துகிறார். அதோடு செல்போனில் செய்தி வாசிக்கும் பழக்கமும் பொது மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த ஒரு செய்தியையும் முழுமையாக படிக்காமல் வாட்ஸ் அப்பில் வாந்தி எடுப்பவர்களை பெரிதாக கண்டு கொள்ள வேண்டாம். கடந்த 50 வருடங்களில் தமிழகம் வட மாநிலங்களை விட நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. நான் தல தோனியின் ரசிகன். இதை தெரிந்து கொண்ட பீடிஆரும், ராஜாவும் என்னை கடைசியில் பினிஷிங் ஆட வைத்துள்ளனர் என்று ஜாலியாக பேசினார்.

Categories

Tech |