உலகின் வலைதள பயன்பாட்டாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் தேடல் செயலியை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் தேடும் விஷயங்களை புதிய மேம்பட்ட வடிவத்தில் நமக்கு கூகுள் வழங்குகிறது. அதாவது புதிதாக Multi search ஆப்ஷன் என்று இடம்பெற்றுள்ளது. இதனால் நாம் ஒரே இடத்தில் பல விஷயங்களை தேட முடியும். இதனை நாம் இமேஜ் அல்லது வாக்கியங்களை வைத்து தேட முடியும். மேலும் ஆங்கிலம் தவிர உலகில் உள்ள 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் தேட முடியும். அதுமட்டுமில்லாமல் இதில் கூகுள் லென்ஸ் வசதியும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் மட்டும் எட்டு மில்லியன் மக்கள் இந்த லென்ஸ் வசதியை பயன்படுத்தியதாக தெரிகிறது. ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு அதன் ios ஆஃப்களிலும் இந்த கூகுள் தேர்வு செயலியை மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பயனர்கள் ஒரு விஷயத்தை தேடும் நேரத்தில் அவர்களுக்கு படங்களை காட்டுவதை விட, கூடுதலாக அந்த தேடல் சம்பந்தப்பட்ட வீடியோ, புகைப்படம், இடம், முக்கிய சுற்றுலா தளங்கள் போன்ற அனைத்தையும் காட்டும். பலர் பிடித்த உணவுகளை தேடும் போது அவர்களுக்கு அந்த உணவை காட்டுவது மட்டுமில்லாமல் அந்த உணவு எந்த உணவகத்தில் கிடைக்கும் அதனைப் போல வேறு உணவுகள் போன்றவற்றை நமக்கு தெரியும். அதனைத் தொடர்ந்து கூகுள் மேப் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதிகளில் பல வசதிகள் குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதில் புதிய வார்த்தையாக நாம் நமது தாய் மொழியில் தேடலை செய்ய முடியும். 250க்கும் மேற்பட்ட உண்மையைப் போல இருக்கும் போட்டோக்களை கழுகு பார்வை மூலம் காட்டுகிறது. இந்த புதிய கூகுள் மேப் வசதி லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ முதல் கட்டமாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.